

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடை பெறும் ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், டேவிட் வார்னர் தலைமை யிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணி மோதிய 3 ஆட் டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திருமணம் காரணமாக கடந்த இரு ஆட்டத்திலும் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா இன்று களமிறங்குகிறார். தொடக்க வீரரான ஆரோன் பின்ச் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் (74, 50, 67*) அடித்து நல்ல பார்மில் உள்ளார். 3 முறை ஆட்ட நாயகனாக தேர்வான அவரிடம் இருந்து இன்றும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
பிரண்டன் மெக்கலத்திடம் இருந்து பெரிய அளவிலான ரன்குவிப்பு இன்னும் வெளிப்பட வில்லை. புனே அணிக்கு எதிராக மட்டும் 49 ரன்கள் சேர்த்தார். இதே நிலைமையில் தான் கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் உள்ளார். சொந்த மைதானத்தில் ரெய்னா கூடுதல் ரன்கள் சேர்க்க முயற்சிக் கக்கூடும்.
தினேஷ் கார்த்திக், டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் பேட் டிங்கில் கைக்கொடுக்கக்கூடியவர் களாக உள்ளனர். வேகம் மற்றும் மிதவேகப்பந்து வீச்சில் ஜேம்ஸ் பாக்னர், பிராவோ, பிரவீன் குமார் ஆகியோர் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சில் ஜடோஜாவுடன், பிரவீன் தாம்பே, ஷதாப் ஜகதி வலுசேர்ப்பவர்களாக உள்ளனர்.
ஐதராபாத் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றுள்ளது. கடைசியாக மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. வார்னர் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, மோர்கன் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவண் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் 3 ஆட்டத்தில் 16 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். காயம் காரணமாக நெஹ்ரா அவதிப்படுவதால் புவனேஷ்வர் குமார், முஸ்டாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண் ஆகியோரை நம்பியே வேகப்பந்து வீச்சு உள்ளது.