விவசாயிகளின் மகள்களுக்கான கல்விக்கே எனது மாநிலங்களவை எம்.பி ஊதியம் - ஹர்பஜன்

ஹர்பஜன் சிங் (கோப்புப்படம்)
ஹர்பஜன் சிங் (கோப்புப்படம்)
Updated on
1 min read

ஜலந்தர்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள ஹர்பஜன் சிங், தனது சம்பளத்தை விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி நலன்களுக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ஹர்பஜன் சிங். இப்போது அரசியல் களத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் அவர். ஐபிஎல் களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது தமிழில் ட்வீட் செய்து அசத்தியவர் ஹர்பஜன்.

கடந்த 9-ம் தேதி அவர் முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது, விவசாய குடும்பங்களின் நலன் சார்ந்து அமைந்துள்ளது.

"விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி மற்றும் அவர்களது நலன்களுக்காக எனது மாநிலங்களவை உறுப்பினருக்கான ஊதியத்தை வழங்க விரும்புகிறேன். நமது தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளும் பணியில் நான் இணைத்துள்ளேன். அதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்" என ஹர்பஜன் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

அவரது முடிவை நெட்டிசன்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in