’கொத்து புரோட்டாவும், சிக்கன் குருமாவும்தான் மிகவும் பிரபலம்’ - சிஎஸ்கே வீரர்கள் வெளியிட்ட வீடியோ

ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பா
Updated on
1 min read

சென்னை: தென் இந்தியாவில் புரோட்டாவும், சிக்கன் குருமாவும்தான் மிகவும் பிரபலமானது என்று சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

தென் இந்தியாவில் அல்லது சென்னையில் மிகவும் பிரபலமான மூன்று உணவுகள் எது என்ற கேள்விக்கு சிஎஸ்கே வீரர்கள் அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்து சிஎஸ்கே அணி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஷிவம் துபே, மகேஷ் தீக்சஷனா, ராபின் உத்தப்பா ஆகியோர் தங்களுக்கு தெரிந்த மிகவும் பிரபலமான உணவுகளின் பெயர்களை தெரிவித்துள்ளனர்.

ஷிவம் துபே தோசை தான் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு என்று தெரிவித்துள்ளார். மகேஷ் தீக்ஷனா தோசை, இட்லி, வடை உள்ளிட்ட உணவுகளின் பெயர்களைத் தெரிவித்துள்ளார். ராபின் உத்தப்பா கொத்து புரோட்டா, சிக்கன் குருமா, இட்லி உள்ளிட்ட உணவுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

வீடியோவைக் காண:

மேலும் எந்த பில்களுக்கு ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவீர்கள் என்ற கேள்விக்கு ஷிவம் துபே, கேஸ் பில், மின்சார கட்டணம், மொபைல் பில் ஆகியவற்றை செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். ராபின் உத்தபா மொபைல் பில்லும், தீக்சனா மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதைப்போன்று சிஎஸ்கே வீரர்களின் புனைப்பெயர்கள், இடது கை பேட்ஸ்மேன்கள், எந்தெந்த பில்களை ஆன்லைன் வழியாக செலுத்துவீர்கள் என்ற கேள்விகளுக்கு இந்த மூன்று வீரர்களும் பதில் அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in