Last Updated : 06 Apr, 2016 09:21 AM

 

Published : 06 Apr 2016 09:21 AM
Last Updated : 06 Apr 2016 09:21 AM

மகளிர் ஹாக்கி: இந்திய அணி தோல்வி

ஹாகெய்ஸ் பே கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி நேற்று சீனாவிடம் 1-2 என்ற கோல்கணக்கில் தோற்றது.

நியூஸிலாந்தில் உள்ள ஹாஸ்டிங்ஸ் நகரில் மகளிருக்கான ஹாகெய்ஸ் பே கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்த லீக் போட்டிகளில் அயர்லாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளிடம் இந்தியா தோற்றது. இந்நிலையில் மூன்றாவது லீக் போட்டியில் நேற்று சீனாவுடன் இந்தியா மோதியது.

இப்போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல்கணக்கில் சீனாவிடம் தோற்றது. இந்திய அணியில் ராணி ஒரு கோல் அடித்தார். சீன அணியில் யு கியான், வாங் மேங்யூ ஆகியோர் கோல்களை அடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x