Published : 12 Apr 2022 06:24 PM
Last Updated : 12 Apr 2022 06:24 PM

இதே நாளில் கடந்த 2004-இல் கிரிக்கெட் களத்தில் லாரா படைத்த சாதனை

2004-இல் இதே நாளில் கிரிக்கெட் களத்தில் அரியதொரு சாதனை படைத்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா. அவரது சாதனையை இதுநாள் வரை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தகர்க்க வில்லை.

90-களில் கிரிக்கெட் பார்த்து வளர்ந்த ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் மனதிலும் பலரது மனதை கவர்ந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பிரையன் லாரா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்கள் எடுத்தவர். அவரது பேட்டிங் சராசரி 52.88. 18 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் உலகில் ஒரு சாதனை படைத்திருந்தார். அந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக படைத்த சாதனை அது. ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் லாரா, 582 பந்துகளை எதிர்கொண்டு 400 ரன்கள் சேர்த்தார். மொத்தம் 778 நிமிடங்கள் களத்தில் விளையாடி இருந்தார். 43 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் இதில் அடங்கும். அதற்கு முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்திருந்தது. அந்த போட்டியில் அவரது 400 ரன்கள்தான் தோல்வியை தவிர்த்துள்ளது.

நாட்-அவுட் பேட்ஸ்மேனாக லாரா பெவிலியன் திரும்பினார். 37 வயதில் கடந்த 2007-இல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லாரா. இதுவரை அவரது சாதனையை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தகர்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x