Published : 11 Apr 2022 11:23 PM
Last Updated : 11 Apr 2022 11:23 PM
நவி மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.
163 ரன்கள் இலக்கை துரத்திய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த முறை அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் கேன் விலையம்சன் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. அபிஷேக் ஷர்மா பவர் பிளே ஓவர்களை நன்றாக பயன்படுத்தி பவுண்டரிகளாக அடித்து விளையாடினார். இதனால், ஆரம்ப ஓவர்களிலேயே அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 9வது ஓவரில் தான் இந்த கூட்டணியை பிரித்தார் ரஷீத் கான். 32 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டுக்காக வெளியேறினார்.
ஷர்மா சென்ற பிறகு கேன் வில்லியம்சன் அதிரடி காட்டினார். அவருக்கு ராகுல் திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரான் ஆகியோர் உறுதுணையாக இருக்க இந்த சீஸனின் முதல் அரைசதத்தை விளாசினார் விலையம்சன். 57 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் அவுட் ஆகினார் வில்லியம்சன். எனினும், நிகோலஸ் பூரான் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இது அந்த அணிக்கு இரண்டாவது வெற்றியாகும். எய்டன் மார்க்ரம் 12 ரன்களும், நிகோலஸ் பூரான் 34 ரன்களும் எடுத்தனர். குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ஹர்திக் மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணிக்கு மேத்யூ வேட், சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணையை நீடிக்க விடாமல், 2வது ஓவரிலேயே புவேனஸ்குமார் பிரித்து அனுப்பினார். அவர் வீசிய பந்தில் 7 ரன்களை எடுத்திருந்த சுப்மன் கில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தாக களத்துக்கு வந்த சாய் சுதர்சன், மேத்யூ வேட் உடன் கைகோத்தார்.
அவரை 11 ரன்களில் தமிழக வீரர் நடராஜன் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து சில மேத்யூ வேட் 19 ரன்களில் வெளியேற, 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 80 ரன்களை சேர்த்திருந்தது. அடுத்து வந்த டேவிட் மில்லரும் பெரிய அளவில் ரன்களை சேர்க்காமல் 12 ரன்களிலேயே வெளியேறினார்.
அபிநவ் மனோஹர், ஹர்திக் பாண்ட்யா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, அபினவ் மனோஹரை புவனேஷ்குமார் வெளியேற்றினார். 21 பந்துகளை எதிர்கொண்டவர், 35 ரன்களை எடுத்து நடையை கட்டினார். மறுபுறம் ஹர்திக் பாண்ட்யா நிலைத்து நின்று ஆடி அணி நம்பிக்கையூட்டினார். கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை அந்த அணி தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 162 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில், புவனேஷ்குமார், நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன், உமரான் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களைச் சேர்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT