கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்
இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்
Updated on
1 min read

சான்சீயோன்: நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறார் கிடாம்பி. காலிறுதியில் தென் கொரிய நாட்டு வீரர் சன் வன்ஹோவுக்கு எதிராக விளையாடினார். ஆட்டத்தின் முதல் செட்டை 21-12 என சுலபமாக கைப்பற்றினார் ஸ்ரீகாந்த். இருப்பினும் இரண்டாவது செட்டில் ஆர்ப்பரித்து எழுந்தார் வன்ஹோ.

அந்த செட்டை 18-21 என்று புள்ளிகள் கணக்கில் இழந்தார் ஸ்ரீகாந்த். பரபரப்பான கட்டத்தில் மூன்றாவது செட் ஆரம்பமானது. இருவரில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் பற்றியிருந்தது. இருந்தும் முதல் செட்டை அப்படியே அச்சடித்தது போல 21-12 என வென்றார் ஸ்ரீகாந்த். அதன் பலனாக ஆட்டத்தையும் வென்றார். அதோடு ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் வீரராக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி தடம் பதித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக விளையாடி வருகிறார். முதல் செட்டில் சிந்து முன்னிலை பெற்றுள்ளார்.

அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணையர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாறாக நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் தடம் பதித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in