IPL 2022 | பிரித்வி ஷா அதிரடி, கைகொடுத்த ரிஷப் பண்ட் - டெல்லிக்கு 150 ரன்கள் இலக்கு

IPL 2022 | பிரித்வி ஷா அதிரடி, கைகொடுத்த ரிஷப் பண்ட் - டெல்லிக்கு 150 ரன்கள் இலக்கு
Updated on
1 min read

மும்பை: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 149 ரன்களை சேர்த்தது.

ஐபிஎல் 15வது சீசனின் 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணிக்கு பிரித்வி ஷாவும், டேவிட் வார்னரும் துவக்கம் கொடுத்தனர். ஒருபுறும் பிரித்வி ஷா அதிரடி காட்ட, மறுபுறம் டேவிட் வார்னர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்.

முதல் 6 ஓவர் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 52 ரன்களை லக்னோ அணி சேர்த்திருந்தது. பிரித்வி ஷா 27 பந்துகளில் 47 ரன்களை குவித்திருந்தார். 9 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் 3 ரன்களை சேர்ந்திருந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரித்வி ஷாவை 7-வது ஓவரில் அவுட்டாக்கி மைதானத்தை விட்டு வெளியேற்றினார் கிருஷ்ணப்பா கௌதம். 34 பந்துகளில் 61 ரன்களை சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார் பிரித்வி ஷா.

இதையடுத்து களத்திற்கு வந்த ரோவ்மேன் பவல், டேவிட் வார்னருடன் கைகோத்தார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டையும் லக்னோ அணி பறிகொடுத்தது. ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார் டேவிட் வார்னர். 12 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார் வார்னர். அவரைத் தொடர்ந்து ரவி பிஷ்னோய் வீசிய பந்து ரோவ்மேன் பவலைக் கடந்து ஸ்டம்பை பதம் பார்க்க, அவரும் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

11 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை சேர்த்திருந்தது. அதன்பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் - சர்பராஸ்கான் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 149 ரன்களை சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும், கிருஷ்ணப்பா கௌதம் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in