இலங்கை நெருக்கடி | தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல்

ஜெயவர்த்தனே | கோப்புப் படம்
ஜெயவர்த்தனே | கோப்புப் படம்
Updated on
1 min read

கொழும்பு: இலங்கை நாட்டின் தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது பதவியிலிருந்து விலகி உள்ளனர். இந்த கவுன்சிலுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தலைவராக செயல்பட்டு வந்தார்.

விளையாட்டுக் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடந்த 2020 ஆகஸ்ட்டில் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது. முன்னதாக இலங்கை நாட்டின் தற்போதைய சிக்கலுக்கு யார் காரணம். இதனை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை சொல்லி இருந்தார் ஜெயவர்த்தனே. இந்நிலையில் ஜெயவர்த்தனே உட்பட உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் உள்ள ஜெயவர்த்தனே, ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இலங்கை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மக்கள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர். ஆனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிவிலக மாட்டார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அரசு கொறடா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in