வெற்றியின் பெருமை கிருனால் பாண்டியாவையே சேரும்: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு

வெற்றியின் பெருமை கிருனால் பாண்டியாவையே சேரும்: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்கடித்தது. 5 ஆட்டத்தில் விளையாடி உள்ள மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. டிரெவிஸ் ஹெட் 37, விராட் கோலி 33, டி வில்லியர்ஸ் 29, சர்ப்ராஸ் கான் 28 ரன் எடுத்தனர்.

ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய பெங்களூரு அணி 10 ஓவர்கள் வரை ஓவருக்கு 9 ரன்கள் விகிதம் சேர்த்தது. 11-வது ஓவரில் விராட் கோலி, டி வில்லியர் ஆகியோரை, கிருனால் பாண்டியா தனது சுழற்பந்து வீச்சால் ஆட்டமிழக்க செய்தார். இதுவே பெங்களூரு அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த முக் கிய காரணமாக அமைந்தது. 4 ஓவர் கள் வீசிய கிருனால் பாண்டியா 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

171 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, பொல்லார்டு ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 12 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ரோஹித் 44 பந்தில் 62 ரன்னும், பொல்லார்டு 19 பந்தில் 39 ரன்னும் விளாசினர்.

வெற்றி குறித்து ரோஹித் சர்மா கூறும்போது, “வெற்றியின் புகழ் கிருனால் பாண்டியாவுக்கே சேரும். அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிருனால் பாண்டியா விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் அவர் 26 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். தற்போது பெங்களூரு அணிக்கு எதிராக மிக முக்கியமான இரு விக்கெட்களை வீழ்த்தி அணி முன்னேறிச் செல்ல உதவியுள்ளார். சிறந்த முறையில் பந்து வீசுவதை அவர் அறிந்துவைத்துள்ளார்.

மேலும் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்குதகுந்தபடி செயல் படுகிறார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in