தருவைகுளத்தில் மாநில அளவிலான - கடற்கரை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சில் ஆட்சியர் பேசியதாவது:

கடலோரப் மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அவர்களுக்குப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக, கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகள் தருவைகுளத்தில் 2 நாட்கள் நடக்கின்றன.

அந்தந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றன. இவ்வாறு, 10 மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in