கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பையின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவே காரணம்: ஜோஸ் பட்லர் பாராட்டு

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பையின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவே காரணம்: ஜோஸ் பட்லர் பாராட்டு
Updated on
1 min read

ரோஹித் சர்மாவின் அமைதியான அணுகுமுறைதான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தது என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் கொல்கத் தாவில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல் கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஆடியது. இப்போட் டியில் முதலில் ஆடிய கொல் கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் காம்பீர் 64 ரன்களையும், மணிஷ் பாண்டே 52 ரன்களையும், ரஸ்ஸல் 36 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் மெக்லினாகன் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 188 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடவந்தது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆட்டத்தின் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்து 54 பந்துகளில் 84 ரன்களை குவித்து மும்பை அணியை கரை சேர்த்தார். அவருக்கு துணையாக பார்த்திவ் படேல் 23 ரன்களையும், பட்லர் 41 ரன்களையும் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப் புக்கு 188 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் தோற்றதால் மும்பை வீரர்கள் சற்று அழுத்தமான மன நிலையிலேயே இருந்தனர். கொல் கத்தா அணி 187 ரன்களை எடுத் ததும் அந்த அழுத்தம் இன்னும் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா தனது அமைதி யான அணுகுமுறையால் ஆட் டத்தை எதிர்கொண்டார். ரோஹித் சர்மாவின் இந்த அணுகுமுறை அவருக்கு எதிரே நின்று ஆடிய மும்பை அணியின் மற்ற பேட் ஸ்மேன்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத் தது. அது அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

டி20 உலகக்கோப்பை கிரிக் கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோற்றதால் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தேன். அதை இந்த போட்டியின் வெற்றி போக்கிவிட்டது. இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in