FIFA கால்பந்து உலகக் கோப்பைக்கான சின்னம் வெளியீடு

FIFA கால்பந்து உலகக் கோப்பைக்கான சின்னம் வெளியீடு
Updated on
1 min read

வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரையில் FIFA கால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான சின்னத்தை (Mascot) வெளியிட்டுள்ளது FIFA.

5 அல்லது 6 கால்பந்து கூட்டமைப்புகளை சேர்ந்த 32 நாடுகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடர் மொத்தம் 8 மைதானங்களில் நடைபெற உள்ளது. இதுவரையில் மொத்தம் 29 அணிகள் இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இத்தாலி இந்த தொடரில் விளையாட தகுதி பெறவில்லை. இத்தகைய சூழலில் இந்த தொடருக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. "La'eeb" ('ல'யீப்) என்ற பெயரில் இந்த சின்னம் வெளியாகியுள்ளது. அரபு மொழியில் இதற்கு அபார திறன் படைத்த வீரர் என்பது பொருளாம்.

நேற்று தோஹாவில் நடைபெற்ற உலகக் கோப்பை குரூப் விவரம் வெளியாகி இருந்தார். அந்த நிகழ்வில் 'ல'யீப் சின்னம் அறிமுகமாகி இருந்தது. இந்த சின்னம் அறிமுகமான அடுத்த நொடி முதல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு நேர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in