Published : 02 Apr 2022 06:36 AM
Last Updated : 02 Apr 2022 06:36 AM

நயாகரா நீர்வீழ்ச்சி போன்று பனிப்பொழிவு: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விமர்சனம்

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி போன்று பனிப்பொழிவு இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் பயிற்சியாளர்ஸ்டீபன் பிளெமிங் குற்றச்சாட்டி யுள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் மும்பைபார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஆட்டத்தில் 210 ரன்களை குவித்தபோதிலும் சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.பெரிய அளவிலான இலக்கை விரட்டிய லக்னோ அணி 3 பந்துகளைமீதம் வைத்து வெற்றி கண்டது.

ஷிவம் துபே வீசிய 19-வது ஓவரில் எவின் லீவிஸ், ஆயுஷ் பதோனி ஜோடி 25 ரன்களை விளாசியது சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாகஅமைந்தது.

தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன்பிளெமிங் கூறும்போது, “தொடக்கத்திலேயே சுழற்பந்து வீச்சு விருப்பங்கள் நீக்கப்பட்டது. ஏனெனில் மைதானம் ஈரத்தின் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியை போன்று இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை இறுகப்பிடித்து வீசுவதும், சிறப்பாக செயல்படுவதும் கடினமாக இருந்தது.

எனினும் அழுத்தம் கொடுத்துக் கடைசியில் அதிக ரன்கள் தேவைப்படும்படியான சூழலை உருவாக்கநினைத்தோம். கடைசியில் வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்துவதா அல்லது சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்துவதா என்கிற முடிவுமைதானத்தில் எடுக்கப்பட்டது. ஷிவம் துபேவின் பந்துவீச்சை அவர்கள் நன்குக் கையாண்டார்கள். ஒரு ஓவர் முக்கியமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். அதில் லக்னோ அணி சிறப்பாக செயல்பட்டது.

210 ரன்கள் என்பது சமமானதாகவே இருக்கும் என கருதினோம். ஏனெனில் தற்போதைய மைதானத்தின் தன்மை அவ்வாறே உள்ளது.2-வது பேட் செய்த லக்னோ அணிக்கே நிலைமை சாதகமாக இருந்தது. நாங்கள் 210 ரன்களை பெறுவதற்கு நன்றாக செயல்பட்டோம். ஆனால் இரவில் செல்லச் செல்ல கடினமாகிவிடும் என்பதை நாங்கள் எப்போதும் யதார்த்தமாக உணர்ந்தோம்” என்றார்.

இன்றைய ஆட்டம்

மும்பை - ராஜஸ்தான்

நேரம்: பிற்பகல் 3.30

குஜராத் - டெல்லி

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x