மலேசிய ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் சாய்னா, சிந்து

மலேசிய ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் சாய்னா, சிந்து
Updated on
1 min read

மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் பிரிவில் இந்தியா வின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். அதே வேளையில் ஆடவர் பிரிவில் பிரனோய், காந்த் ஆகியோர் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

சாய்னா நெவால் 21-16, 21-7 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் நிட்சாவோன் ஜிந்தாபோலை தோற் கடித்தார். இந்த ஆட்டம் 30 நிமிடங்கள் நடைபெற்றது. 26 வயதான சாய்னா தனது அடுத்த சுற்றில் கொரியாவின் யேயான் ஜூவை எதிர்த்து விளையாடுகிறார்.

6-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து 21-16, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ பிங்க்ஜியோவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 40 நிடங்கள் நீடித்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு முறை வெண்கல பதக்கம் வென்ற சிந்து தனது அடுத்த சுற்றில் கொரியாவின் ஸங் ஜி ஹையுனுடன் மோதுகிறார்.

காந்த் 21-23, 21-9, 10-21 என்ற கணக்கில் தாய்லாந்தின் போன்ஸாக்கிடமும், பிரனோய் 19-21, 20-22 என்ற கணக்கில் ஜப்பானின் கென்டோ மோமோடா விடமும் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in