பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி ஏன்? - பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் விளக்கம்

பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி ஏன்? - பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் விளக்கம்
Updated on
1 min read

மும்பை: ஐபிஎல் டி 20 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததே தோல்விக்குக் காரணம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன் தினம் மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் அணி. 205 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கான், ஒடின் ஸ்மித்ஆகியோரது அதிரடியால் 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.

ஒடின் ஸ்மித் 8 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசியது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. ஷாருக்கான் 20 பந்துகளில், 24 ரன்கள் சேர்த்தார்.

முன்னதாக ஒடின் ஸ்மித் 1 ரன்னில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சை அனுஜ் ராவத் தவறவிட்டிருந்தார். தொடர்ந்து ஒடின் ஸ்மித்தை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை ஹர்ஸால் படேல், சிராஜ் கூட்டணி கோட்டை விட்டது. இதற்கான விளைவை பெங்களூரு அணி சந்தித்தது.

தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறும்போது, “ஒடின் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். அவரை நாங்கள் 10 ரன்களில் ஆட்டமிழக்க செய்திருக்கலாம். ஸ்மித் அதிரடியாக விளையாடக் கூடியவர். வாய்ப்புகளைதக்கவைத்துக் கொள்வது அவ சியமாகும். கேட்ச்கள்தான்ஆட்டத்தில் வெற்றி பெற வைக்கிறது” என்றார்.

இன்றைய ஆட்டம்

ஹைதராபாத் - ராஜஸ்தான்

இடம்: புனே

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in