Published : 21 Mar 2022 06:49 AM
Last Updated : 21 Mar 2022 06:49 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் கடந்த 4-ம்தேதி தாய்லாந்தில் உள்ள வில்லா ஒன்றில் மரணம் அடைந்தார். அவரது மரணம் இயற்கையானதுதான் என பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தாய்லாந்து போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஷேன் வார்னின் இறுதிச் சடங்கு நேற்று மெல்பர்னில் நடைபெற்றது. இதில் அவரது 3 குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் முன்னாள் வீரர்களான மார்க் டெய்லர், ஆலன் பார்டர், கிளென் மெக்ராத், மார்க் வாஹ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல்வான் உட்பட 80 பேர் பங்கேற்றனர்.வார்னின் உடல் அடங்கிய பெட்டியை அவரது நண்பர்கள் சுமந்துசென்றனர். அப்போது வார்னேவின் தாய், மகள் கதறி அழுதனர்.
வார்னேவுக்கு விக்டோரியா அரசு சார்பாக வரும் 30-ம் தேதி மெல்பர்னில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT