

கராச்சி: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 4 நாடுகள் பங்கேற்கும் வருடாந்திர போட்டித் தொடர் குறித்த தனது திட்டத்தை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் விவாதிக்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறும்போது, “மார்ச் 19-ம் தேதி துபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அணுகி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 4 நாடுகள் பங்கேற்கும் வருடாந்திர போட்டித் தொடருக்கான திட்டத்தை விவாதிக்க இருக்கிறேன்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளிலிருந்து ரசிகர்களை ஒதுக்கி வைப்பது நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன். இந்தத் திட்டத்திற்கு இந்தியா மறுத்தால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடன் ஆண்டுதோறும் முத்தரப்பு தொடரைத் தொடங்குவது பற்றி பாகிஸ்தான் யோசிக்கும்” என்றார்.
எனினும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த மாதமே ரமீஸ் ராஜாவின் இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.