

ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 4 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் டெல்லி டேவிர் டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடர்ச்சியாக 3-வது வெற் றியை பெறும் முனைப்பில் உள்ளது ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி அணி. அந்த அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் நல்ல பார்மில் உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 51 பந்தில் 108 ரன்கள் விளாசினார். அவர் இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.
வேகப்பந்து வீச்சில் அனுபவ வீரராக ஜாகீர்கான் உள்ளார். கிறிஸ் மோரிஸ் ரன்குவிப்பை கட்டுப்படுத்துபவராக உள்ளார். சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, பவன் நேகி பலம் சேர்க்கக்கூடும்.
ரோஹித் சர்மா தலைமையி லான மும்பை அணி தொடர்ச்சி யாக 3 தோல்விகளை சந்தித்த போதிலும் கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான 170 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து தன்னம் பிக்கையை அதிகரித்துக்கொண் டுள்ளது மும்பை அணி. வெற்றி பெற்ற இரு ஆட்டத்தில் ரோஹித் சர்மாவே சிறப்பாக செயல்பட்டிருந் தார். கடைசி ஆட்டத்தில் பொல்லார்டு 19 பந்தில் 39 ரன்கள் விளாசியது அணிக்கு வலுசேர்த்துள்ளது. இவர்கள் இருவரை தவிர நம்பிக்கை நட்சத்திரமாக கிருனால் பாண்டியா உருவெடுத்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அவரது பங்களிப்பு அணிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
வேகப்பந்து வீச்சில் டிம் சவுத்தி, மிட்செல் மெக்லினஹன் ஆகியோர் நம்பிக்கை அளிப் பவர்களாக உள்ளனர்.