இங்கிலீஸ் பிரீமியர் லீக்: கிறிஸ்டியானா ரொனால்டோ புதிய உலக சாதனை

இங்கிலீஸ் பிரீமியர் லீக்: கிறிஸ்டியானா ரொனால்டோ புதிய உலக சாதனை
Updated on
1 min read

கால்பந்து போட்டிகளில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ.

கால்பந்து வீரர்களில் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரொனால்டோ. நடந்து வரும் இங்கிலீஸ் பிரீமியர் கால்பந்து லீக் தொடரில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது, தொழில்முறை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தது என்ற சாதனை ஆகும். 807 கோல்களை அடித்து கால்பந்து உலகில் புதிய உச்சம் தொட்டுள்ளார். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பைகான் 805 கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இங்கிலீஸ் பிரீமியர் கால்பந்து லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, நேற்று டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். ஹாட்ரிக் கோலில் இரண்டாவது கோல் அடித்தபோது ஜோசப் பைகானின் உலக சாதனையை முறியடித்தார். இறுதியில், மொத்தமாக மூன்று கோல் அடித்து 807 கோல்கள் அடித்த ஒரே வீரர் ஆனார். இந்தப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனிடையே, ரொனால்டோ நேற்று அடித்த ஹாட்ரிக் கோல்கள், அவரின் 59வது ஹாட்ரிக் ஆகும். அதேபோல் கிளப் கேரியரில் இது அவரின் 49வது ஹாட்ரிக் ஆகும். 2008ல் ஓல்ட் ட்ராஃபோர்ட் அணிக்காக விளையாடிய போது முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in