Published : 10 Mar 2022 05:48 AM
Last Updated : 10 Mar 2022 05:48 AM

அப்பா நீங்கள் எங்கள் இதயத்தில் இருக்கிறீர்கள்: ஷேன் வார்னின் குழந்தைகள் உருக்கம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் (52) கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் உள்ள வில்லா ஒன்றில் மரணமடைந்தார். அவரது மரணம் இயற்கையானது தான் என மருத்துவர்களும், காவல் துறையினரும் அறிவித்தனர். இந்நிலையில் ஷேன் வார்னின் 3 குழந்தைகளும், தந்தைக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

ஷேன் வார்னின் 22 வயதான மகன் ஜேக்சன் கூறும்போது, “என் சகோதரன், என் நண்பன், எனது தந்தையை மிகவும் நேசிக் கிறேன். எனது இதயத்தில் நீங்கள் விட்டுச் சென்ற இடத்தை எதுவும் நிரப்பப்போவது இல்லை. போக்கர் டேபிளில் அமர்வது, கோல்ஃப் மைதானத்தை சுற்றி நடப்பது, புனிதர்களைப் பார்ப்பது, பீட்சா சாப்பிடுவது எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது. ஆனால், நீங்கள் எப்பொழுதும் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்களை மிகவும் இழக்கப் போகிறேன் அப்பா, நீங்கள் உண்மையிலேயே சிறந்த தந்தை மற்றும் துணையாக இருந்தீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா” என்றார்.

ஷேன் வார்னின் மூத்த மகள் புரூக் கூறும்போது, “நாம் ஒருவருக்கொருவர் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த கடைசி நினைவுகளை நான் என்றென்றும் போற்றுவேன். நான் உங்களை முடிவில்லாத வகை யில் நேசிக்கிறேன். உங்களை என்றென்றும் இழக்கிறேன்” என்றார். இளைய மகள் சம்மர் கூறும்போது, “அப்பா, நான் ஏற்கெனவே உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். உங்கள் புன்னகை அறை முழுவதையும் ஒளிரச் செய்யும், எங்கள் நாட்கள் எப்படி இருந்தன என்பதைப் பற்றி பேசும்போதும், நீங்கள் என்னைக் கட்டிப்பிடிக்கும்போது பாதுகாப்பாக உணர்வேன். நீங்கள் என்னைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறீர்கள், நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரிவிப்பீர்கள். அப்பா நீங்கள் இறக்கவில்லை, வேறு இடத்திற்கு சென்றுவிட்டீர்கள், அது எங்கள் இதயத்தில் இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x