

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு விமானம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷெஸ்னா 680 ரக விமானத்தை அவர் பிர் பார்டிசிபகோயஸ் நிறுவனத்தின் மூலம் அடமானமாக இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக ஒ குளோபோ என்ற செய்தித்தாளின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெஸ்னா 680 ரக விமானம் நடுத்தர வகையிலான வணிக ஜெட் வகையை சேர்ந்தது. இதில் 12 பேர் வரை பயணம் செய்யலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் சா பாலோ நகர நீதிமன்றம் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் நெய்மரின் ரூ.310 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் அவர் தனது மற்ற சொத்துக்களை அனுபவித்துக்கொள்ளலாம். ஆனால் விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ கூடாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் வரை நெய்மர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.