Published : 05 Mar 2022 05:42 AM
Last Updated : 05 Mar 2022 05:42 AM

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 357 ரன்கள் குவிப்பு

மொஹாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

மொஹாலியில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்றஇந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.ரோஹித் சர்மா 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் குமரா பந்தில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 33 ரன்னில்எபுல்டேனியா பந்தில் வெளியேறினார். தனது 100-வது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி, ஹனுமா விகாரியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

விராட் கோலி 76 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் எபுல்டேனியா பந்தில் போல்டானார். தனது 5-வதுஅரை சதத்தை அடித்த ஹனுமா விகாரி 58 ரன்கள் எடுத்த நிலையில் பெர்னாண்டோ பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

தொடர்ந்து, ஸ்ரேயஸ் ஐயர் 27ரன்களில் டி சில்வா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களில் லக்மல் பந்தில்போல்டனார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

ரவீந்திர ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணியின்லஷித் எபுல்டேனியா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

விராட் கோலிக்கு பாராட்டு

முதல் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 100-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலிக்கு பிசிசிஐ தரப்பில் பாராட்டு விழாநடத்தப்பட்டது. இதில் பயிற்சியாளர் ராகுல் திராவிட், விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தொப்பியை விராட் கோலிக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். பேட்டிங்கின் போது விராட் கோலி 38 ரன்களை கடந்த போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் 8 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற் றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x