5 வீரர்கள் விளையாடும் பிரீமியர் ஃபுட்ஸால் கால்பந்து போட்டி: லூயிஸ் பிகோ தொடங்கிவைத்தார்
சிறிய கால்பந்து மைதானத்தில் 5 வீரர்கள் கொண்ட அணிகள் மோதும் பிரீமியர் ஃபுட்ஸால் கால்பந்து போட்டிகள் இந்தியாவில் ஜூலை மாதம் நடக்கவுள்ளன. போர்ச்சுகல் நாட்டின் பிரபல கால்பந்து வீரரான லூயில் பிகோ மும்பையில் நேற்று இதை முறைப்படி தொடங்கிவைத்தார்.
ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங் கவுள்ள இப்போட்டிகள் 10 நாட்கள் நடைபெற உள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதரா பாத், கோவா ஆகிய 8 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. போட் டியின் போது ஒவ்வொரு அணி யிலும் தலா 3 சர்வதேச கால் பந்து வீரர்கள் ஆடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்ச மாக 12 வீரர்கள் வரை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இந்தியாவில் நடைபெற உள்ள இந்த பிரீமியர் ஃபுட்ஸால் போட்டிகளின் தலைவராக பிகோ செயல்படுவார்.
மும்பையில் நேற்று பிரீமியர் ஃபுட்ஸால் போட்டிகளை முறைப்படி தொடங்கிவைத்து பேசிய பிகோ, தனக்கு இது புதிய சவாலாக இருக்கும் என்றும் அதை வெற்றிகரமாக செய்துமுடிக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.
சிறுவயதில் இதுபோன்ற கால்பந்து போட்டிகளில் தான் விளையாடியதை நினைவுகூர்ந்த அவர், கால்பந்தில் விரைவாக சிந்திக்கவும், துடிப்பாக செயல்பட வும் இந்த வகையான போட்டிகள் உதவும் என்றார்.
