

தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி மத்தியப் பிரதேசத்தை 8-1 என்ற கோல்கணக்கில் வென்றது.
6-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டிகள் இடாவா நகரில் நடந்து வருகிறது. இதில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக ஆடிய தமிழகம் 8-1 என்ற கோல்கணக்கில் வென்றது. இப்போட்டியில் தமிழகத்தின் தீபா கணேஷ், ஸ்டாலின் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர். ஞானவேல், ஜோஷ்வா, நம்பி, பாஷா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். மத்தியப் பிரதேச அணிக்காக ஜாவித் அலி ஒரு கோல் அடித்தார்.