

ஐபிஎல் தொடரில் மே 19-ம் தேதி குஜராத்-கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டத்தையும், 21-ம் தேதி குஜராத்-மும்பை அணிகள் மோதும் ஆட்டத்தையும் கான்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதில் சிக்கல் எழுந்துள்ளது. கான்பூரில் ஒரே ஒரு 5 நட்சத்திர ஓட்டல் மட்டுமே உள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 3 அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்குவதற்கான இட வசதிகள் இல்லை. மேலும் கான்பூரில் இருந்து லக்னோ விமான நிலையத்துக்கு 71 கி.மீ. தூரம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மைதானத்தில் இரவு நேர போட்டியை நடத்துவதிலும் பிரச்சனை எழுந்துள்ளது.
மைதானத்தில் உள்ள கோபுர விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனை சீரமைக்க கூடுதலாக ஒருவாரகால அவகாசத்தை பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளது உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம். இந்த காரணங்களால் கான்பூரில் ஒரு ஆட்டம் மட்டுமே நடத்தப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே பிசிசிஐ-யின் தொழில்நுட்ப குழு கான்பூர் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளது.