''கிரிக்கெட் பந்துகள் உண்ணக்கூடியவை...'' - ரோஹித் சர்மா ட்விட்டர் கணக்கில் வினோத பதிவுகள்

''கிரிக்கெட் பந்துகள் உண்ணக்கூடியவை...'' - ரோஹித் சர்மா ட்விட்டர் கணக்கில் வினோத பதிவுகள்
Updated on
1 min read

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதன் பின்னணியில் இன்று காலை முதல் அவரின் கணக்கில் பதிவிடப்பட்டுவரும் வித்தியாசமான ட்வீட் பதிவுகள் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கில் இருந்து இன்று காலை வினோதமான ட்வீட் பதிவு செய்யப்பட்டது. முதலில், "நான் காயின் டாஸ்ஸை விரும்புகிறேன்... குறிப்பாக அவை என் வயிற்றில் முடிவடையும் போது!" என்று பதிவிட்டப்பட்டது. பின்னர் மூன்று மணிநேரம் கழித்து, "உங்களுக்குத் தெரியுமா... தேனீக்கள் சிறந்த குத்துச்சண்டை பைகளை உருவாக்குகின்றன!" என்று ஒரு பதிவும், அதற்கு பிறகான இரண்டு மணிநேரம் கழித்து, "கிரிக்கெட் பந்துகள் உண்ணக்கூடியவை... சரியா?" என்று வரிசையாக வினோதமான பதிவுகள் வெளியாகின.

இதையடுத்தே, ரோஹித் சர்மாவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். வழக்கமாக ரோஹித் சர்மா தனது ஐபோனில் இருந்து ட்வீட்களை பதிவிடுவார். ஆனால், இந்த மூன்று ட்வீட்களும் ட்வீட்டெக் மூலமாக பதிவிடப்பட்டுள்ளது. இதனால், நிச்சயம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதனிடையே, வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "எல்லாம் ஓகே தானா கேப்டன். இதற்கு தலை அல்லது வால்களை உருவாக்க முடியாது" என்று ரோஹித் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதேபோல் நெட்டிசன்கள் பலர் ரோஹித் கணக்கில் உள்ள இந்தப் பதிவுகளை டேக் செய்து வேடிக்கையான பதிவுகளையும் இட்டு வருகின்றனர். இதனால் இது ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in