

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையி லான ரைசிங் புனே சூப்பர்ஜயண் ட்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கிய நிலையில் அடுத்த இரு ஆட்டத்திலும் தோல்விகளை சந்தித்தன.
புனே அணியில் அஜிங்க்ய ரஹானே, கெவின் பீட்டர்சன், ஸ்டீவ் ஸ்மித், டு பிளெஸ்ஸி, தோனி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்த நிலையிலும் இவர்களிடம் இருந்து அதிரடியை வெளிப்படுத் தும் வகையிலோ, நிலையான ஆட் டமோ இன்னும் வெளிப்படவில்லை.
பந்து வீச்சும் புனே அணிக்கு வலுவாக அமையவில்லை. இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங், இர்பான் பதான் ஆகிய 3 பேரை மாற்றி மாற்றி பயன் படுத்தியும் வெற்றிக்கு வழிகாண முடியவில்லை. சுழற்பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வினை காட்டிலும் அறிமுக வீர ரான முருகன் அஸ்வினின் நம் பிக்கை அளிக்கும் விதத்தில் செயல் படுவது ஆறுதலாக உள்ளது.
விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், சர்ப்ராஸ் கான் ஆகிய அதிரடி வீரர்களை உள்ளடக்கிய பெங்களூரு அணியின் பந்து வீச்சு சற்று பலவீன மாகவே உள்ளது. வருண் ஆரோன், ரிட்சர்ட்சன், ஹர்ஸால் படடேல் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணி அதிக ரன்களை வாரி வழங்கியது. யுவேந்திரா ஷாகல், பர்வேஸ் ரசூல், இக்பால் அப்துல்லா ஆகியோரை கொண்ட சுழல் கூட்டணிக்கு போதிய அனுபவம் இல்லாததும் பலவீனத்தை அதிகரித்துள்ளது.