அஸ்லான்ஷா கோப்பை: ஆஸி. சாம்பியன்

அஸ்லான்ஷா கோப்பை: ஆஸி. சாம்பியன்
Updated on
1 min read

அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. 25-வது நிமிடத்தில் தாமஸ் கிரெய்க் இந்திய வீரர்களின் தடுப்பாட் டத்தை உடைத்து அருமையாக கோல் அடித்தார். 33-வது நிமிடத் தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை ஹர்மான்பிரித் சிங் கோலாக மாற்ற தவறினார்.

முதல் பாதியில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகித்தது. 35-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 2-வது கோலை அடித்தது. மேத்யூ டாவ்சனிடம் இருந்து பாஸை பெற்று தாமஸ் கிரெய்க் இந்த கோலை அடித்தார். அடுத்த 8-வது நிமிடத்தில் மேட் ஹோட்ஸ் 3-வது கோலை அடிக்க இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 57-வது நிமிடத்தில் மேட் ஹோட்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்க ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in