Published : 24 Feb 2022 07:12 AM
Last Updated : 24 Feb 2022 07:12 AM
லக்னோ: இலங்கை கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இலங்கை அணியை சந்திக்கிறது. அதேவேளையில் இலங்கை அணியானது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்தியத் தொடரை அணுகுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT