

ரியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி யில் கலந்துகொள்வதற்கான தகுதிச் சுற்று போட்டியான ஆசியா-ஓசி யானா போட்டி சீனாவில் நடை பெற்றது. இதில் இந்திய வீராங் கனை பவானி தேவி காலிறுதி யில் சிங்கப்பூரின் லீ அன் ஹிமினிடம் தோல்வியடைந்தார். இதனை யடுத்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அவர் இழந்தார்.
இதுகுறித்து பவானி தேவி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் எனக்கானது அல்ல. இதற்காக 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நான் தகுதி பெறமாட்டேன் என்று அர்த்தமல்ல.
ஆசியா-ஓசியானா போட்டியின் காலிறுதியில் தோல்வியடைந்துள் ளேன். முயற்சி செய்தால் நிச்சயம் இலக்கை அடையமுடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன். இந்தச் சமயத்தில் என் பயிற்சியாளர்கள், கோ பவுண்டேசன் நண்பர்கள் மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. என் இலக்கு 2020 என்று குறிப்பிட்டுள்ளார் பவானி தேவி.
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி, கடந்த 2014-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2015-ம் ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இதுமட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.