Published : 22 Feb 2022 05:04 AM
Last Updated : 22 Feb 2022 05:04 AM

உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

சென்னை

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் 8-வது சுற்றில் இந்தியகிராண்ட் மாஸ்டரான 16 வயதானசென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக் ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x