Published : 03 Apr 2016 08:43 AM
Last Updated : 03 Apr 2016 08:43 AM

டி 20 உலகக் கோப்பையில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது யார்? - மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்து கின்றன. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி கோப் பையை வென்றாலும் இரண்டாவது முறையாக கோப்பை வென்ற அணி என்ற சாதனையை நிகழ்த்தும்.

ஊதிய ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக தனது நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் கடுமையான வார்த்தை போர் நடத்தி இறுதியில் சமாதான வழிக்கு வந்த பின்னரே 6-வது டி 20 உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்கேற்றது. ஆனால் அந்த அணி வீரர்கள் பிரமாதமான ஆட் டத்தை வெளிப்படுத்தி வருகின் றனர். சூப்பர் 10 சுற்றில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய முன்னணி அணி களை வீழ்த்திய நிலையில் அனுபவம் இல்லாத ஆப்கானிஸ் தானிடம் தோல்வி கண்டது.

அரையிறுதியில் இந்திய அணியை வலிமையான அதிரடி ஆட்டத்தால் வென்றது. மேற் கிந்தியத் தீவுகள் அணியின் பலமே அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அதிக வலுவுடன் பந்தை அடித்து ஆடுவது தான். கெய்லை மட்டுமே நம்பி இருக்காமல் கிடைக்கும் வாய்ப்பை ஒவ்வொரு வரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான அரை யிறுதியில் கெய்ல், மார்லன் சாமு வேல்ஸ் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்த போதும் லெண்டில் சிம்மன்ஸ், சார்லஸ், ஆந்த்ரே ரஸல் ஆகியார் அதிரடியில் மிரட்டினர்.

பிளட்சர் காயம் அடைந்ததால் அணியில் சேர்க்கப்பட்ட லெண்டில் சிம்மன்ஸ் தனது முதல் ஆட்டத்தி லேயே 51 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற பெரிதும் உதவினார்.

கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்படாத நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமாக விளை யாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி யுள்ளது இங்கிலாந்து அணி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அந்த அணி 29 வருடங்களுக்கு பிறகு தற்போது உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை எதிர்கொள்கிறது

1987-ல் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் மைக் காட்டிங் தலை மையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.

இங்கிலாந்து அணி சூப்பர் 10 சுற்றில், முதல் ஆட்டத்தில் மேற் கிந்தியத் தீவுகளிடம் தோல்வியை சந்தித்த போதிலும் அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 230 ரன்களை விரட்டி சாதனை வெற்றி பெற்றது.

அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற ஜோ ரூட், ஜேஸன் ராய், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோரது பேட்டிங் உதவியுள்ளது. இந்த தொடரில் விராட் கோலிக்கு பிறகு அதிக ரன்கள் குவித்துள்ளது ஜோ ரூட் தான். 195 ரன்கள் சேர்த்துள்ள அவரது ஸ்டிரைக் ரேட் 145 ஆக உள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் இந்த தொடரில் இரு ஆட்டங்களில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். மற்ற ஆட்டங்களிலும் அவர் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. இதே நிலைமையில்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மார்லன் சாமுவேல்ஸூம் உள்ளார்.

சூப்பர் 10 சுற்றில் இங்கிலாந் துக்கு எதிராக 47 பந்துகளில் 100 ரன்கள் விளாசிய கெய்ல் இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். பிராவோ, டேரன் சமி ஆகியோரும் பேட்டிங் கில் மிரட்ட தயாராக உள்ளனர். வலுவான அதிரடி ஆட்டத்தையே பலமாக நம்பி இருக்கும் மேற்கிந் தியத் தீவுகள் பந்து வீச்சிலும் புதிய யுக்தியை கையாள்கிறது. எதிரணியின் ரன்குவிப்பை தங்களது மெதுவான பந்து வீச்சால் கட்டுப்படுத்துகிறது.

இங்கிலாந்து அணியிலும் இத் தகைய பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆடுகளத்தில் புற்கள் காணப்படுவதால் இதை பயன் படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சா ளர்கள் டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், பிலங்கெட், பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்படக் கூடும் என கருதப்படுகிறது.

இதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆந்த்ரே ரஸல், கார்லோஸ் பிரத்வெயிட், பிராவோ, டேரன் சமி ஆகியோரும் நெருக்கடித் தரக்கூடும். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் இங்கி லாந்தை விட மேற்கிந்தியத் தீவுகள் அணியே பலத்துடன் உள்ளது.

சாமுவேல் பத்ரி, சுலைமான் பென் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ள னர். இங்கிலாந்தின் மொயின் அலி, அடில் ரஷீத் ஆகியோர் அரையிறுதியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு நியூஸிலாந்து அணி யின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த உதவினர்.

டி 20 உலகக் கோப்பையை இதுவரை எந்த ஓர் அணியும் இரு முறை வென்றதில்லை. இந்த சாதனையை இன்றைய ஆட்டத் தில் பட்டம் வெல்லும் அணி முறி யடித்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க உள்ளது. இங்கிலாந்து அணி கடந்த 2010-ம் ஆண்டும், மேற்கிந்தியத் தீவுகள் 2012-ம் ஆண்டும் டி 20 உலகக் கோப்பை யில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விவரம்:

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் பிலிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லயாம் பிளங்கெட், ரீஸ் டாப்ளே, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், லயாம் டாவ்ஸன்.

மேற்கிந்தியத் தீவுகள்:

டேரன் சமி (கேப்டன்), கிறிஸ் கெய்ல், கார்லோஸ் பிரத்வெய்ட், டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல், மார்லன் சாமுவேல்ஸ், ஜான்சன் சார்லஸ், லென்டில் சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், ஆஷ்லே நர்ஸ், தினேஷ் ரம்தின், சாமுவேல் பத்ரி, சுலைமான் பென்,ஜெரோம் டெய்லர்.

நேரம்: இரவு 7
இடம்: கொல்கத்தா
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

மே.இ.தீவுகள் ஆதிக்கம்

இரு அணிகளும் இதுவரை டி 20 போட்டிகளில் 13 முறை மோதியுள்ளன. இதில் இங்கி லாந்து 4 ஆட்டத்திலும், மேற்கிந் தியத் தீவுகள் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது 14-வது முறையாக இரு அணி களும் மோதுகின்றன.

ரூ.23 கோடி பரிசு

டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.23.5 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகள் தலா ரூ.5 கோடி பெறுகின்றன. இதுதவிர போட்டியில் பங்கேற்ற எல்லா அணிகளுக்கும் தலா ரூ.2 கோடி வழங்கப்படுகின்றன. இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.67 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x