வேகப்பந்து வீச்சே இந்தியா-இங்கிலாந்து தொடரைத் தீர்மானிக்கும்: கிளென் மெக்ரா

வேகப்பந்து வீச்சே இந்தியா-இங்கிலாந்து தொடரைத் தீர்மானிக்கும்: கிளென் மெக்ரா
Updated on
1 min read

இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. 5 டெஸ்ட்கள் கொண்ட கடினமான தொடரில் வேகப்பந்து வீச்சே முடிவுகளைத் தீர்மானிக்கும் என்று கிளென் மெக்ரா தெரிவித்துள்ளார்.

"இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சுதான் டெஸ்ட் முடிவுகளைத் தீர்மானிக்கும். இந்தியப் பந்து வீச்சாளர்கள் ‘டியூக்’ பந்தில் வீச வேண்டும். அதன் தையல் பரப்பு பெரியது. எனவே கடுமையாக ஸ்விங் ஆகும், ரிவர்ஸ் ஸ்விங் செய்யலாம். எனக்கு டியூக் பந்தில் வீசப் பிடிக்கும், அங்கு பந்துகளை சற்று ஃபுல் லெந்த்தில் வீசவேண்டும். அந்தப் பிட்ச்களில் ஓரளவுக்கு பந்துகள் பவுன்ஸ் ஆகும்” என்றார்.

வருண் ஆரோன் மற்றும் ஈஷ்வர் பாண்டே ஆகியோர் மெக்ராவிடம் சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு அகாடமியில் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளைப் பெற்றனர்.

கிளென் மெக்ரா மேலும் கூறுகையில், “மன உறுதி மிக முக்கியம், அனைத்திற்கும் மேலாக சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்தியப் பந்து வீச்சாளர்கள் இப்போதெல்லாம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடுகின்றனர். எனவே டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் ரிதம் பெற பயிற்சி மிகவும் அவசியம்” என்று கூறிய கிளென் மெக்ரா, தோனி பற்றிக் குறிப்பிடுகையில், “எனக்கு அவர் மீதும் இந்திய அணிக்காக அவர் செய்த பங்களிப்பின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு. அவரை கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று சிலர் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அயல்நாட்டில் வென்றால் அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் நம்பிக்கை உறுதியாகும் என்றார் கிளென் மெக்ரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in