Published : 14 Feb 2022 08:20 AM
Last Updated : 14 Feb 2022 08:20 AM
பெங்களூரு: ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.இதில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ஏலம் எடுக்க 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் அவரை, பஞ்சாப் அணி ரூ.11.50 கோடிக்கு வாங்கியது.
கடந்த சீசனில் லியாம் லிவிங்ஸ்டன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஷாமிகா கருணாரத்னேவை ரூ.50 லட்சத்துக்கும், தமிழகத்தின் பாபா இந்திரஜித்தை ரூ.20 லட்சத்துக்கும் கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலியாவின் ரிலே மெரிடித்தை ரூ.1 கோடிக்கு மும்பை அணியும், மேற்கிந்தியத் தீவுகளின் அல்ஸாரி ஜோசப்பை ரூ.2.40 கோடிக்கு குஜராத் அணியும், ஆஸ்திரேலியாவின் சீன் அபோட்டை ரூ.2.40 கோடிக்கு ஹைதராபாத் அணியும், இந்தியாவின் பிரசாந்த் சோலங்கியை ரூ.1.20 கோடிக்கு சென்னை அணியும் வாங்கின. சிங்கப்பூர் ஆல்ரவுண்டரான டிம் டேவிட்டை ரூ.8.25 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. வைபவ் ஆரோராவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. முகேஷ் சவுத்ரி, சுப்ரான்ஷு சேனாபதி ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது.
மேலும் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆடம் மில்னே, சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் ஆகியோரை தலா ரூ.1.90 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. இங்கிலாந்தின் தைமால் மில்ஸை ரூ.1.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், மேற்கிந்தியத் தீவுகளின் ரொமா ரியோ ஷெப்பர்டை ரூ.7.75 கோடிக்கு ஹைதராபாத்தை அணியும் ஏலம் எடுத்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT