

மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் லெண்டில் சிம்மன்ஸுக்கு வீசிய ஒரேயொரு நோ-பாலினால் நான் வில்லனாகிவிட மாட்டேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
புதிய ஐபிஎல் அணியான புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், நாளை சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்வதை அடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அந்தநாள் நான் என் வீட்டுக்குச் சென்ற போது எனது நாய்க்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டிருந்தது. ஃபிட்ஸ் வந்து அது அவதியுற்றது. வாழ்க்கையில் எது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, எது மிக மிக முக்கியம் என்பதை எனக்கு அது அறிவுறுத்தியது. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஒரு துண்டு பேப்பரைக் கூட வாசிக்கவில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் அறிய முயற்சி செய்யவில்லை,.
நான் நோ-பால் வீசி யுகங்கள் ஆகிறது என்பதையும் ஒரேயொரு நோ-பாலுக்காக நான் வில்லனாகி விடமாட்டேன் என்றும் நல்ல பத்திரிகையாளர்களும், கிரிக்கெட் தெரிந்தவர்களும் கூறினார்கள்.
ஆனால் என்னை அதற்காக வில்லானாகத்தான் பார்ப்பார்கள் என்றால் அதனை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு தெரியவில்லை.
பனிப்பொழிவின் போது நான் வீசவில்லை, எனவே நேர்மையாகக் கூற வேண்ட்மெனில் பனிப்பொழிவில் விசியவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். பனிப்பொழிவில் பந்து எப்படி இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. முதல் 12 பந்தில் நான் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை உருவாக்கினேன், என்றார் அஸ்வின்.
பனிப்பொழிவுதான் அணியின் பந்து வீச்சைப் பாதித்தது என்று தோனி கூறினாரே, என்று கேட்டதற்கு, “கேப்டன் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது” என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் பனிப்பொழிவு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் எந்த பத்திரிகையைச் சேர்ந்தவர் என்பதை அறிவதற்காக அஸ்வின் அவரை எதிர்கொண்டார், அப்போது, அஸ்வின், “நான் உங்களை குற்றம் கூறவில்லை, நீங்கள் பொறுப்புடன் எழுத வேண்டும், ஏனெனில் லட்சக்கணக்கானோர் நீங்கள் எழுதுவதைப் படித்து அதனை வைத்து கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்றார்.
ஐபிஎல் 2016-ல் புதிய அணிக்காக ஆடுவது பற்றி..
இது ஒரு புதிய தொடக்கம். இது எனக்கு புதிய அணி எனவே சவாலும் புதிதே. புதிய சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும். எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு அணிக்கு மதிப்பை கூட்டுவது என்பதே முக்கியம், எனக்கு இந்த புதிய சூழல் உற்சாகம் அளிக்கிறது. இதனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
அடுத்தடுத்து இரண்டு பெரிய தொடர்களில் ஆடுவது நிச்சயம் கடினமே. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இது கடினமானதே, ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அது மிக வேகமாக நடத்தப்படும் ஒரு போட்டித் தொடராகும்.
நாம் விரைவில் சூழலுக்குப் பழகி நமது கடினப்பாடுகளையும் எதிர்கொண்டு முன்னேற்றத்துகாக முயற்சி செய்வோமானால் ஒரு கிரிக்கெட் வீரராக அந்த ஆண்டு முழுதும் நம்மால் சிறப்பாகச் செயல் பட முடியும்.
இவ்வாறு கூறினார் அஸ்வின்.