Published : 13 Feb 2022 08:08 PM
Last Updated : 13 Feb 2022 08:08 PM

IPL Auction 2022 | கடைசி சுற்றில் வீரர்களை வாங்கி குவிக்கும் அணிகள் - தமிழக வீரர்களை வசப்படுத்திய சென்னை

பெங்களூரு: 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் இரண்டாவது நாளாக பெங்களூருவில் இன்று தொடங்கியது. முக்கிய வீரர்களுக்கு மத்தியில் இளம் வீரர்களையும் அணிகள் ஆர்வமாக எடுத்தன.

கடைசிக்கு முந்தையை சுற்றில், நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் ரூ.80 லட்சத்துக்கு பெங்களூரு அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.1 கோடிக்கு வாங்கபட்டார். ரோவ்மேன் பவலை ரூ.2.8 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்திய வீரர் ரிஷி தவானை ரூ.55 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. தென்னாபிரிக்க ஆல் ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் ரூ.50 லட்சத்துக்கு சென்னை அணி வசம் வந்தார். ஷெர்ஃபேன் ரூதர்போர்ட்டை ரூ.1 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.

அதிரடி ஆட்டக்காரர் டேனியல் சாம்ஸை மும்பை ரூ.2.6 கோடிக்கு வாங்கியது. நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் ரூ.1.9 கோடிக்கு சென்னை அணி வாங்கப்பட்டார். ஒடிஷாவைச் சேர்ந்த சுப்ரன்ஷு சேனாபதியை சென்னை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. மேற்கிந்திய தீவுகள் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட்டை ஹைதராபாத் ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் ரூ.8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஆடம் மில்னேவை ரூ.1.9 கோடிக்கு சென்னை அணியும், டைமல் மில்ஸை ரூ.1.5 கோடிக்கு மும்பை அணியும், ஓபட் மெக்காய்யை ரூ.75 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியும், வைபவ் அரோராவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியும் வாங்கின. இந்திய வீரர் பிரவின் துபே ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ். பஞ்சாப் அணி இந்திய வீரர் ப்ரேக் மங்கத் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

இந்திய வீரர் சுயாஷ் பிரபுதேசாய்யை ரூ.30 லட்சத்துக்கு பெங்களூருவும், முகேஷ் சவுத்ரியை ரூ.20 லட்சத்துக்கு சென்னையும், ரஷிக் தாரை ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தாவும், சாமா மிலைண்ட்டை ரூ.25 லட்சத்துக்கு பெங்களூரு அணிகளும்வாங்கின.

சென்னை அணி இளம்வீரர் பிரசாந்த் சொலான்கியை ரூ.1.2 கோடிக்கு வாங்கியது. ஆஸ்திரேலிய வீரர் ஷான் அப்பாட் ரூ.2.4 கோடிக்கு ஹைதரபாத் அணியால் வாங்கப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் வீரர் அல்ஜரி ஜோசப்பை ரூ.2.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.

நேற்றைய ஏலத்தில் வாங்காத வீரர்கள் இன்று திரும்பவும் ஏலம் விடப்பட்டனர். இதில் தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை ரூ. 3 கோடிக்கும், இந்திய வீரர் விருத்திமான் சஹாவை ரூ.1.9 கோடிக்கும், மேத்யூ வாட்டை ரூ.2.4 கோடிக்கும் குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸுக்கு ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணி தன் வசப்படுத்தியது.

சென்னை அணி இறுதிக்கட்டத்தில் தமிழகத்தின் ஊட்டியைச் சேர்ந்த ஹரி நிஷாந்தை ரூ.20 லட்சத்துக்கும், நாராயண் ஜெகதீசனை ரூ.20 லட்சத்துக்கும் கிறிஸ் ஜோர்டானை ரூ.3.6 கோடிக்கும் கைப்பற்றியது. இறுதிச்சுற்றில் சுரேஷ் ரெய்னா கலந்துகொள்ளவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x