Published : 13 Feb 2022 07:54 AM
Last Updated : 13 Feb 2022 07:54 AM

2022 ஐபிஎல் ஏலம் ஹைலைட்ஸ்: இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு வாங்கியது மும்பை: தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கு அள்ளியது சென்னை

பெங்களூரு

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில்இந்திய அணியின் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்குமும்பை இந்தியன்ஸ் அணியும், தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வானிடு ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியது.

இதே தொகைக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்சால் படேலையும் ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. லக்னோ அணி ரூ.8.75 கோடிக்கு மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டரையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.8.75கோடிக்கு இந்திய ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரையும் ஏலம் எடுத்தன.

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடிபேட்ஸ்மேனான ஷிம்ரன் ஹெட்மயரை ரூ.8.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிருணல்பாண்டியாவை ரூ.8.25 கோடிக்கு லக்னோ அணியும், ஷிகர் தவணை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணியும்ஏலம் எடுத்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கும், அம்பதி ராயுடுவை ரூ.6.75 கோடிக்கும், டுவைன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கும், ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கும் ஏலம் எடுத்தது.டெல்லி கேபிடல்ஸ் ரூ.6.50 கோடிக்கு ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷையும், டேவிட் வார்னரை ரூ.6.25 கோடிக்கும் வாங்கியது.

குஜராத் டைட்டன்ஸ் இங்கிலாந்தின் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கும், மொகமது ஷமியை ரூ.6.25கோடிக்கும் வாங்கியது. கொல்கத்தா அணி நித்திஷ் ராணாவை ரூ.8 கோடிக்கும், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸை ரூ.7.25 கோடிக்கும் எடுத்தது. லக்னோ அணி தென்ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை ரூ.6.75 கோடிக்கும், இந்திய வீரர்களான மணீஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கும், தீபக் ஹூடாவை ரூ.5.75 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

பஞ்சாப் அணி, இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கு வாங்கியது. ராஜஸ்தான் ராயல் அணி நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்டை ரூ.8 கோடிக்கும், இந்திய இளம் வீரர் தேவ்தத் படிக்கலை ரூ.7.75 கோடிக்கும், ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.5 கோடிக்கும் ஏலம்எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தினேஷ் கார்த்திக்கை ரூ.5.50 கோடிக்கும், தென் ஆப்பிரிக்காவின் டூ பிளெஸ்ஸிஸை ரூ.7கோடிக்கும் வாங்கியது. முஸ்டாபிஸுர் ரஹ்மான், குல்தீப் யாதவ் ஆகியோரை தலா ரூ.2 கோடிக்கு டெல்லி வாங்கியது.

ஹைதராபாத் அணி, ரூ.10.75 கோடிக்கு மேற்கிந்தியத் தீவுகளின்நிக்கலஸ் பூரனை ஏலம் எடுத்தது.நியூஸிலாந்தின் லூக்கி பெர்குசனை ரூ.10 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. ராஜஸ்தான் அணி, இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ.4 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது.

இங்கிலாந்தின் மார்க் வுட்டைரூ.7.5 கோடிக்கு லக்னோ அணி யும், புவனேஷ்வர் குமாரை ரூ.4.20கோடிக்கு ஹைதராபாத் அணியும், ஜோஸ் ஹேசல்வுட்டை ரூ.7.75 கோடிக்கு பெங்களூரு அணியும், ஷர்துல் தாக்குரை ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணியும் ஏலம் எடுத்தன.

ராகுல் டிவாட்டியாவை ரூ.9 கோடிக்கு குஜராத் அணியும், ஷிவம் மாவியை ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா அணியும் கமலேஷ் நாகர்கோட்டியை ரூ.1.10. கோடிக்கு டெல்லி அணியும் ஷாபாஷ் அகமதுவை ரூ.2.4 கோடிக்கு பெங்களூருஅணியும், ஹர்பிரீத் பிராரை ரூ.3.80கோடிக்கு பஞ்சாப் அணியும், அபிஷேக் சர்மாவை ரூ.6.50 கோடிக்கு ஹைதராபாத் அணியும் ரியான் பராக்கை ரூ.3.80 கோடிக்கு ராஜஸ்தான் அணியும் ராகுல் திரிபாதியை ரூ.8.50 கோடிக்கு ஹைதராபாத் அணியும் தேவல்த் பிரேவிஸை ரூ.3கோடிக்கு மும்பை அணியும் யுவேந்திர சாஹலை ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், ராகுல் சாஹரை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப்அணியும் ஏலம் எடுத்தன.

தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.9கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்காக விளையாடாத வீரர்களில் அதிகதொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், டேவிட் மில்லர்,ரித்திமான் சாஹா, முகமது நபி, மேத்யூ வேட், சேம் பில்லிங்ஸ், இம்ரன் தகிர், உமேஷ் யாதவ் உள்ளிட்டோரை முதல் நாளில் எந்த அணிகளும் ஏலம் எடுக்கவில்லை.

மயங்கி விழுந்த ஏலம் நடத்துநர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடத்துநராக இங்கிலாந்தைச் சேர்ந்த எட்மியட்ஸ் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் ஏலம் நடைபெற்றபோது எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார்.

இலங்கை வீரர் ஹசரங்காவை அணிகள் தேர்வு செய்ய மும்முரமாக இருந்தபோது மேடையிலிருந்து எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஐபிஎல் ஏலம் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. எட்மியட்ஸுக்குக் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

எட்மியட்ஸின் உடல்நிலை பற்றி பிசிசிஐ தரப்பு கூறும்போது, ‘‘ஏலம் நடத்துநரின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரைக் கவனித்து வருகிறார்கள். அடுத்தப் பகுதி ஏலத்துக்கு அவர் மீண்டும் வருவார்” எனக் கூறப்பட்டுள்ளது.

உணவு இடைவேளைக்கு பின்னர் தொலைக்காட்சி வர்ண னையாளர் சாரு சர்மா ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x