IPL Auction 2022 | இலங்கை வீரர் ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு!  | முழுப் பட்டியல்

IPL Auction 2022 | இலங்கை வீரர் ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு!  | முழுப் பட்டியல்
Updated on
2 min read

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கி நடந்துவந்தது. இலங்கை வீரர் ஹசரங்கா ஏலம் நடந்துகொண்டிருக்கும்போது ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் மேடையிலேயே மயக்கமடைந்ததையடுத்தால் தடைபட்டது. பின்னர் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு, எட்மீட்ஸ்க்கு பதிலாக சாரு ஷர்மாவை ஐபிஎல் நிர்வாகம் புதிய ஏலம் நடத்துபவராக அறிவித்தது.

அதிகபட்ச விலைக்கு ஏலம் போன இரண்டாவது வீரர்:

இதுவரையிலான ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தை இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா பிடித்துள்ளார். இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. ரூ.1 கோடி அடிப்படையில் தொடங்கிய இவரின் தொகை இறுதியாக ரூ.10.75 கோடியில் முடிந்தது. கடந்த சீசனில் இவரை எடுத்திருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியே இந்தமுறையும் இத்தனை கோடி கொடுத்து எடுத்தது.

தமிழக வீரருக்கு டிமான்ட் :

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அடுத்ததாக ஏலம் விடப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். அடிப்படை விலையான ரூ.1.50 கோடி தொடங்கிய அவரின் ஏலத் தொகை ரூ.8.75 கோடியில் முடிந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை எலாம் எடுத்தது.

லக்னோ அணியில் குர்னால் பாண்டியா:

இந்திய அணி ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் இவரை எடுக்க ஆர்வம் காட்ட, பின்னர் குஜராத் அணியும் போட்டியில் இறங்கியது. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அவரை எடுத்து.

ஐபிஎல் ஏலம் 2022 - இதுவரை...

> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (​குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)

2022 ஏலம் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் அணிகள் வசமிருந்த ஏல இருப்புத் தொகை விவரம்:

> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in