அஸ்லான் ஷா கோப்பை: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி

அஸ்லான் ஷா கோப்பை: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி
Updated on
1 min read

அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்திடம் 1-2 என்ற கோல்கணக்கில் தோற்றது.

மலேசியாவில் உள்ள இபோ நகரில் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா ஆடியது. இந்த ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் நியூஸிலாந்து வீரர் கென் ரஸ்ஸல் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

இந்திய வீரர் மந்தீப் சிங் 36-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து சமநிலை ஏற்படுத்தியபோதிலும், நியூஸிலாந்தின் நிக் வில்சன் 41-வது நிமிடத்தில் கோல் அடித்து மீண்டும் அந்த அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவர இந்திய வீரர்கள் கடும் முயற்சி செய்தனர். ஆனால் அவர் களால் கோல் அடிக்க முடிய வில்லை.

நாளை முக்கிய ஆட்டம்

இதைத்தொடர்ந்து நியூஸிலாந்து அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. ஏற்கெனவே 2-வது இடத்தில் இருந்த இந்தியா, 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல்கணக்கில் ஜப்பானை வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மலேசிய அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது

இந்த தொடரின் இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற வேண்டுமானால் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக் ஆட்டத் தில் மலேசியாவை வீழ்த்த வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in