

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்காக இலங்கை வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
பல்லேகலில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது இலங்கை அணியின் தொடக்க வீரர் கவுசல் சில்வா காயம் அடைந்தார். பீல்டிங்கின்போது அவரது தலையில் பந்து தாக்கியது. தினேஷ் சண்டிமால் அடித்த பந்து ‘ஷார்ட்லெக்’ பகுதியில் நின்ற சில்வாவின் தலையில் பட்டது. தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த போதும் பந்து தாக்கியது.
உடனடியாக விமானம் மூலம் சில்வா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் சில பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான கவுசல் சில்வா 24 டெஸ்டில் விளையாடி 1,404 ரன் எடுத்துள்ளார். சராசரி 31 ஆகும்.