ஒரு ரன்னில் டெல்லியை வீழ்த்தியது குஜராத்: நெருக்கடியில் அசத்தியது பிராவோ, பிரவீன்குமார் கூட்டணி

ஒரு ரன்னில் டெல்லியை வீழ்த்தியது குஜராத்: நெருக்கடியில் அசத்தியது பிராவோ, பிரவீன்குமார் கூட்டணி
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. கடைசி இரு ஓவர்களில் பிரவீன்கு மாரும், பிராவோவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத் தில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. டிவைன் ஸ்மித் 30 பந்தில் 53 ரன்னும், பிரண்டன் மெக்கலம் 36 பந்தில் 60 ரன்னும் விளாசினர். இந்த ஜோடி 10.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் குவித்து மிரட்டியதால் குஜராத் அணி எப்படியும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இம்ரன் தகிர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ரன் குவிப்பு வேகத்தையும் குறைத்தனர். இம்ரன் தகிர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டும், மோரிஸ் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

172 ரன்கள் இலக்குடன் விளை யாடிய டெல்லி அணிக்கு, குஜராத் அணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் குல்கர்னி அடிமேல் அடி கொடுத் தார். அவரது பந்தில் சஞ்சு சாம்சன் 1, குயின்டன் டி காக் 5, கருண் நாயர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 16 ரன் களுக்கு 3 விக்கெட்டை பறி கொடுத்த நிலையில் டுமினி, ரிஷப் பன்ட் ஜோடி மிக நிதானமாக விளையாடியது.

10 ஓவர்களில் டெல்லி அணி 51 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிஷப் பன்ட் 20 ரன்னில் ஃபாக்னர் பந்தில் வெளியேற அடுத்து வந்த கிறிஸ் மோரிஸ் தனது அதிரடியால் குஜராத் அணியை மிரளச் செய்தார். 17 பந்தில் அவர் அரை சதம் விளாச டெல்லி அணி வெற்றியை நோக்கி நெருங்கியது.

கடைசி 3 ஓவர்களில் 29 ரன் கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்து வீசினார். இந்த ஓவரில் 11 ரன் களை விட்டுக்கொடுத்த போதிலும் டுமினியை வெளியேற்றினார். டுமினி 43 பந்தில் 48 ரன் சேர்த்தார். மேலும் இந்த ஓவரில் அரவுண்ட் திசையில் இருந்து ஸ்டெம்புகளை நோக்கி வீசப்பட்ட பந்துகளை எதிர்கொள்வதில் கிறிஸ் மோரிஸ் தடுமாறினார். இந்த தடுமாற்றத்தை 19-வது ஓவரை வீசிய பிரவீன்குமார் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

முதல் இரு பந்துகளில் பவன் நெகி ஒரு ரன் மட்டுமே சேர்க்க அடுத்த வந்த யார்க்கரில் கிறிஸ் மோரிஸால் ரன் சேர்க்க முடிய வில்லை. 4-வது பந்தை லாங்க் ஆன் திசையை நோக்கி மோரிஸ் அடிக்க ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. கடைசி இரு பந்துகளையும் பிரவீன்குமார் நேர்த்தியாக வீச இந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே டெல்லி அணியால் சேர்க்க முடிந்தது.

6 பந்துகளில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்தை கையில் எடுத்த பிராவோவும் அரவுண்ட் திசை யில் இருந்தே வீசினார். ஸ்டெம்பை நோக்கி வந்த முதல் பந்தை மோரிஸ் பாயிண்ட் திசையை நோக்கி அடிக்க, ஃபாக்னர் கேட்ச் செய்ய தவறியதால் பவுண்டரியானது. அடுத்த இரு பந்துகளில் தலா ஒரு ரன் அடிக்கப்பட்டது.

4 மற்றும் 5-வது பந்துகளில் தலா இரு ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இரு முறை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்தை நடு ஸ்டெம்பை நோக்கி தாழ்வாக பிராவோ வீச மோரிஸால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முடிவில் 171 ரன்களை எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது டெல்லி அணி. மோரிஸ் 32 பந்தில், 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரி களுடன் 82 ரன் விளாசியது அணியின் வெற்றிக்கு உதவாமல் போனது.

ஆட்ட நாயகனாக மோரிஸ் தேர் வானார். குஜராத் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டத்தில் விளையாடிய உள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 5 ஆட்டத்தில் இரண்டாவது தோல்வியை சந்தித்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in