Last Updated : 04 Apr, 2016 05:21 PM

 

Published : 04 Apr 2016 05:21 PM
Last Updated : 04 Apr 2016 05:21 PM

மூளையற்றவர்களின் அணி கருத்துக்காக டேரன் சமியிடம் மார்க் நிகோலஸ் மன்னிப்பு

‘மூளையற்றவர்கள் அணி’ என்று முன்னாள் இங்கிலாந்து வீரரும் நடப்பு வர்ணனையாளருமான மார்க் நிகோலஸ் கூறியதற்கு டேரன் சமியிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டுக்கு முன்னதாக மார்க் நிகோலஸ் எழுதிய பத்தியில் மே.இ.தீவுகள் பற்றி தரக்குறைவாக எழுதியதாக மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சமி வருந்தியதையடுத்து மார்க் நிகோலஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து மார்க் நிகோலஸ் கூறியதாவது:

மூளையற்றவர்கள் என்ற தொனியில் நான் எழுதவில்லை, ஆனால் மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட ஒருநாட்டின் அணியை மரியாதை குறைவாக மதிப்புக் கொடுக்க லாயக்கில்லாத கருத்தை நான் தெரிவித்தேன்.

இதற்காக டேரன் சமியிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். நான் அவர் மீது உயரிய மதிப்பை வைத்துள்ளேன். அந்த அணியையும் நான் பெரிய அளவில் மதிப்பவனே.

இறுதிப் போட்டியின் முடிவு எப்படியிருந்தாலுமே நான் எனது மன்னிப்பை தெரிவிக்கவே முடிவு செய்திருந்தேன், நான் இப்போது ஏன் மன்னிப்பு கோருகிறேன் என்றால் மே.இ.தீவுகள் ரசிகர்கள் இந்த வெற்றியை நிச்சயம் நீண்ட நாட்களுக்குக் கொண்டாடுவார்கள் எனவே ரசிகர்களை புண்படுத்தியதற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். பேருவகையின் உணர்வுகள் அவர்களிடையே இப்போது இருக்கும். அவர்களிடமிருந்து பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிருந்து அவர்களின் ‘ரம்’ சுவையை நாம் ருசிக்க முடியும்.

தெளிவாகக் கூறுகிறேன், மே.இ.தீவுகள் அணி ‘மூளையற்றவர்களின் அணி’ அல்ல. என்னுடைய அந்த பத்தி இந்திய அணி மற்றும் தோனியைப் பற்றிய பத்தியாகும், அதில் அணிகளின் வாய்ப்புகள் பற்றி ஓரிரு கருத்துகளை ஆங்காங்கே கூறும்போது ஒரு ஓரமாக மே.இ.தீவுகள் பற்றி இந்தக் கருத்தை குறிப்பிட்டேன்.

மே.இ.தீவுகள் அணியின் மீதான எனது விமர்சனம், நான் ஆஸ்திரேலியாவில் அந்த அணி ஆடியதை வைத்துத்தான். முதலில் உலகக்கோப்பை, பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்தான் எனது விமர்சனத்துக்கு அடிப்படை. ஜேசன் ஹோல்டருக்கு அணியின் மற்ற வீரர்கள் ஆதரவளிக்கவில்லை.

நான் ஒழுங்காக புரிந்து கொள்ளாத வாக்கியங்களில் மற்ற அணிகளுக்காக ஆதரவாக எழுதியிருந்தேன், அப்போது மிகவும் சாதாரணமாக போகிற போக்கில், மே.இ.தீவுகள் பற்றி எழுதும் போது “மூளைகுறைவுதான் ஆனால் ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது” என்று எழுதிவிட்டேன். மற்றவர்கள் புரிந்து கொள்வது போல் ‘மூளையற்றவர்கள்’, மூளையில்லாதவர்கள் என்கிற அர்த்தத்தில் நான் குறிப்பிடவில்லை.

எப்படியிருந்தாலும் உண்மையில் எனது கருத்திற்காக நான் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... நிறைய காரணங்களுக்காக 2016, உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியை என்னால் மறக்க முடியாது, டேரன் சமியையும் நான் மறக்க மாட்டேன். நான் அவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கூறினார் மார்க் நிகோலஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x