

இந்தியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையை மேற்கிந்தி யத் தீவுகள் அணி கைப்பற்றி சாதனை படைத்தது. 2-வது சாம்பி யன் பட்டம் வென்று அணிக்கு பெருமை சேர்த்த கேப்டன் டேரன் சமியின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவரது பெயரை செயின்ட் லூசியாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை செயின்ட் லூசியா மகாண முதல்வர் கென்னி டி அந்தோணி வெளியிட்டுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. செயின்ட் லூசியாவில் உள்ள பியூஸ்ஜோர் கிரிக்கெட் மைதானம் இனிமேல் டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம் என அழைக்கப்படும். உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க வீரர் ஜாண்சன் சார்லஸையும் பெருமைப்படுத்தும் விதமாக டேரன் மைதானத்தின் ஒரு கேலரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டேரன் சமியும், ஜாண்சன் சார்லஸூம் செயின்ட் லூசியாவை சேர்ந்தவர்கள் ஆவர். டி 20 உலகக் கோப்பையை வென்றதும் டேரன் சமி, கிரிக்கெட் வாரியம் மீதும், நிர்வாகிகள் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை கூறிய நிலை யில் அவரது பெயர் மைதானத் துக்கு சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.