

41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி. இந்த வெற்றி பலரின் பாராட்டுகளை பெற்றுள்ள நிலையில் இறுதிப் போட்டியில் வென்று அவர் கோப்பையை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் இடத்திலுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி இன்று நடந்த பெண்கள் அரையிறுதி ஆட்டத்தில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவின் 41 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஷ்லிக் பார்ட்டி. கடந்த 41 வருடங்களாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் டென்னிஸ் தொடரில் ஒரு ஆஸ்திரேலியர் கூட இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 1980ல் வெண்டி டர்ன்புல் என்பவர் கடைசியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார். அதன்பிறகு, இந்த நீண்டகால ஏக்கத்தை தீர்த்துள்ளார் பார்ட்டி.
25 வயதாகும் அஷ்லிக் பார்ட்டி அரையிறுதியில், அமெரிக்காவின் மேடிஸனை எதிர்கொண்டார். மொத்தம் 1.02 மணி நேரம் நடந்த அரையிறுதி போட்டியில் மேடிஸனுக்கு எதிராக ஒரு செட்டை கூட விடவில்லை. அஷ்லிக்கின் அனல்பறந்த ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இறுதியில், மொத்தம் நடந்த செட்களில் 6-1, 6-3 என்ற கணக்கில் மேடிஸனை கலங்கடித்து வெற்றிபெற்றார். மொத்தமாக, இந்த ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை அஷ்லிக் பார்டியிடம் இருந்து ஒரு செட்டில் 4 ஆட்டங்களுக்கு மேல் யாரும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை. அந்த அளவு இந்தமுறை வெறித்தனமாக விளையாடி வருகிறார்.
2019 இல் பிரெஞ்ச் ஓபனையும் 2021இல் விம்பிள்டனையும் வென்ற பார்டி, 1978 இல் கிறிஸ் ஓ'நீலுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனை வென்ற முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஏலம் எடுத்துள்ளார். 2019ல் பிரெஞ்ச் ஓபனையும் 2021ல் விம்பிள்டனையும் வென்று உலகளவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் இடத்திலுள்ள பார்டி, 1978ல் கிறிஸ் ஓ'நீலுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனை வெல்ல போகும் முதல் ஆஸ்திரேலிய வீராங்கனையாக மாறுவாரா என்பது டேனியல் கோலின்ஸ் உடனான இறுதி ஆட்டத்தில் தெரிந்துவிடும்.