T20 WC | பாகிஸ்தான் போட்டி அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க 2 இந்திய வீரர்களைத் தவிர யாருக்குமே திறன் இல்லை: முகமது ஹஃபீஸ்

முகமது ஹஃபீஸ் | பாகிஸ்தான் முன்னாள் வீரர்
முகமது ஹஃபீஸ் | பாகிஸ்தான் முன்னாள் வீரர்
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க கோலி, ரோகித் ஆகிய இரு இந்திய வீரர்களைத் தவிர, அணியில் வேறு யாருக்கும் திறன் இல்லை என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவுள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 நகரங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. 7 நகரங்களிலும் மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சூப்பர்-12 பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ், இந்தியா எப்படி இந்தப் போட்டியை எதிர்கொள்ளப் போகிறது என்பது பற்றி தனது கணிப்பைப் பகிர்ந்துள்ளார். ஹஃபீஸ் தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஏசியன் லயன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் தக் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இப்போதைய இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களால் அந்த அழுத்தத்தை தாங்க இயலாது.

சாதாரணமாகவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இது டி20 உலகக் கோப்பைப் போட்டி. முதல் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முதல் போட்டி மீது அத்தனை கவனமும் குவிந்துள்ளது.

அழுத்தமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருப்பதால் முதல் போட்டியில் தோற்றால் அதன் விளைவு பெரிதாக இருக்கும். இந்த அழுத்தம் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்குமே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

கடந்த முறை நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் ஆட்டத்திலேயே இந்தியா, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. க்ரூப் ஸ்டேஜிலேயே இந்திய அணி வெளியேறியது. திறம்பட விளையாடிய பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in