Published : 11 Apr 2016 09:44 AM
Last Updated : 11 Apr 2016 09:44 AM

ஹாக்கி: இந்தியா வெற்றி

அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் நேற்று இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் கனடாவை தோற்கடித்தது.

மேலசியாவின் இபோ நகரில் 25-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் திம்மையா, ஹமன்பிரீத் சிங், தல்வீந்தர் சிங் ஆகியோர் கோல்களை அடித்தனர். கனடா அணியில் கீகன் பெரைரா ஒரு கோல் அடித்தார்.

முன்னதாக நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்தி ரேலிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி யது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. நியூஸிலாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போட்டியில் நியூஸிலாந்து அணி 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x