டி20 கிரிக்கெட் அதிகரிப்பதால் டெஸ்ட் போட்டிகளின் தரம் குறையாது: ரவீந்திர ஜடேஜா கருத்து

டி20 கிரிக்கெட் அதிகரிப்பதால் டெஸ்ட் போட்டிகளின் தரம் குறையாது: ரவீந்திர ஜடேஜா கருத்து
Updated on
1 min read

டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அதிகரிப்பதால் டெஸ்ட் போட்டிகளின் தரம் குறையாது என்று கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜ்காட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் மோதியது. இப்போட்டி யில் முதலில் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது. அந்த அணியில் டுபிளெஸ்ஸி 69 ரன்களையும், பீட்டர்சன் 37 ரன்களையும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் களம் இறங்கிய கேப்டன் தோனி மின்னல் வேகத்தில் ஆடி 10 பந்துகளில் 22 ரன்களை விளாசினார்.

இதைத்தொடர்ந்து ஆடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிஞ்ச்சும், மெக்கல்லமும் 51 பந்துகளில் 85 ரன்களைக் குவிக்க, குஜராத் அணியின் வெற்றி எளிதானது. பிஞ்ச் 50 ரன்களையும், மெக்கல்லம் 49 ரன்களையும், ரெய்னா 24 ரன்களையும் குவிக்க குஜராத் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

இந்த போட்டிக்கு பிறகு குஜராத் லயன்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:

பிஞ்ச், மெக்கல்லம் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். அதுவே எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர்களின் சிறப்பான தொடக்கத்தால், எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் ஆடினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கும் தயாராக தங்களை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கிரிக் கெட் வீரர்களுக்கு உள்ளது. எனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அதிகரிப்பதால் டெஸ்ட் போட்டி களின் தரம் குறையாது. இவ்வாறு ஜடேஜா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in