Last Updated : 16 Jan, 2022 08:37 AM

 

Published : 16 Jan 2022 08:37 AM
Last Updated : 16 Jan 2022 08:37 AM

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகல்: பிசிசிஐ தலைவர் கங்குலி, ஜெய் ஷா கருத்து என்ன?

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, விராட் கோலி | கோப்புப்படம்


புதுடெல்லி :இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக, உலகக் கோப்பை முடிந்தபின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். ஆனால், அதன்பின் ஒருநாள் தொடருக்கான அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு புறப்படும் பிசிசிஐ தலைவர் கங்குலி மீது குற்றச்சாட்டை வைத்துவிட்டு கோலி புறப்பட்டார். தன்னிடம் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் தன்னிடம் யாரும்கேட்கவில்லை, ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கும் முன் என்னிடம் கருத்துக் கேட்கவில்லை என்று கோலி குற்றம்சாட்டினார்.

ஆனால், பிசிசிஐ தலைவர் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகுவதாக கூட்டத்தில் அறிவித்தபோது தலைவர் கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுத் தலைவர் உள்ளிட்ட பலரும் அந்த முடிவை எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம் ஆனால், அவர் பிடிவாதமாக இருந்தார்" எனத் தெரிவித்தார்

அதேசமயம், டி20, ஒருநாள் போட்டிக்கு தனித்தனி கேப்டன்கள் இருக்க முடியாது என்பதால், ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்தும் கோலியை நீக்கினோம் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கோலி கூறியதில் உண்மை இருக்கிறதா அல்லது பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதில் உண்மை இருக்கிறதா எனத் தெரியாமல் இருந்தது.

இது தொடர்பாக விராட் கோலிக்கும், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டது.

பிசிசிஐயுடன் மோதலில் ஈடுபட்டபோதே விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், தென் ஆப்பிரிக்கா பயணம் செல்லும் இந்திய அணியின் தார்மீக மனவலிமை குறைந்துவிடக்கூடாது, அணியின் செயல்பாட்டில் ஏதும் சிக்கல் இருக்கக்கூடாது என்று பிசிசிஐ கருதியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

அதேசமயம், டெஸ்ட் தொடரை இந்திய இழந்தாலோ, அல்லது கோலியின் செயல்பாட்டில், பேட்டிங் திறமையில் ஏதேனும் விமர்சனங்கள் எழுந்தால் கோலியின் ேகப்டன்ஷிப் பதவியில் கத்தி விழுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் முன்பு தெரிவித்தன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ெடஸ்ட் தொடர் தோல்வி, மைக்கில் தென் ஆப்பிரி்க்க கிரிக்கெட் வாரியத்தை விமர்சி்த்தது போன்ற கோலியின் செயல்கள் அவரின் பதவிக்கு ஆபத்தாக முடிந்தன.

கோலியின் கேப்டன் பதவி விலகல் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் கூறுகையில் “ விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அனைத்து விதங்களிலும் சிறப்பாகச் சென்றது. கேப்டன் பதவியிலிருந்து விலகுவது அவரின் தனிப்பட்ட முடிவு. அவரின் முடிவை பிசிசிஐ முழுமையாக மதிக்கிறது. எதிர்காலத்தில் இந்திய அணியை மிகப்பெரிய உயரத்துக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய வீரர் விராட் கோலி. சிறந்த வீரர் கோலி, வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ வாழ்த்துகள் விராட் கோலி, இந்திய கேப்டனாக அற்புதமாகபணியாற்றி இருக்கிறீர்கள். இந்திய அணியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகச்சிறப்பாக விளையாடும் அணியை கொண்டு வந்தவர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் இந்திய அணி கோலி தலைமையில் பெற்ற வெற்றிகள் சிறப்பானவை” எனத் தெரிவித்தார்

பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ வாழ்த்துகளை தெரிவிக்கிறது. அவரின் ஈடுஇணையற்ற தலைமைப்பண்பு குணங்களுக்கு, இந்திய டெஸ்ட் அணியை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்த்தியதற்கு கோலிக்கு வாழ்த்துகள். 68 போட்டிகளுக்கு கோலி தலைைம ஏற்று 40 வெற்றிகளை கோலி பெற்றுக்கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x