இனி சீனாவின் விவோ இல்லை: ஐபிஎல் ஸ்பான்ஸராக டாடா குழுமத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

:புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்ஸராக சீனாவின் விவோ நிறுவனத்துக்குப் பதிலாக டாடா குழுமம் அடுத்த இரு ஆண்டுகளுக்கு உரிமத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு 2022 சீசன் மற்றும் 2023்ம் ஆண்டு சீசனுக்கும் டைட்டில் ஸ்பான்ஸராக டாடா குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு நேற்று வழங்கியுள்ளது.

இது குறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறுகையில் “இந்த சீசனுக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் டாடா குழுமம்தான்” எனத் தெரிவித்தார். விவோ நிறுவனத்துடன் ரூ.2,200 கோடிக்கு பிசிசிஐ ஸ்பான்ஸர் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், நிச்சயம் அதைவிட குறைந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், எத்தனை கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

கடந்த 2020ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. ஆனால், ஐபிஎல் நிர்வாகத்துடன் 2017 முதல் 2022ம் ஆண்டுவரை ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை விவோ நிறுவனம் செய்திருந்தது.

இதனால் ஓர் ஆண்டு மட்டும் ட்ரீம்11 நிறுவனத்துக்கு ஸ்பான்ஸர்ஷிப் கொடுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு மீண்டும் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்பான்ஸர்ஷிப்பில் 50 சதவீதம் பணத்தை பிசிசிஐ வைத்துக்கொண்டு மீதமுள்ள சதவீதத்தை மற்ற அணிகளுக்கு பிரித்து வழங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in